ஆடு மேய்க்கும் சமயங்களில் நஞ்சம்மா பாடிய பாடலுக்கு தேசிய விருது

0 10116
ஆடு மேய்க்கும் சமயங்களில் நஞ்சம்மா பாடிய பாடலுக்கு தேசிய விருது

தேசிய விருதிற்கு தேர்வான நஞ்சம்மா பாடிய 'களக்காத்த சந்தனம்' பாடல், அவர் ஆடு மேய்க்கும் சமயங்களில் பாடும் பாடல் என தகவல் வெளியாகி உள்ளது.

அய்யப்பனும் கோஷியும் படத்தில் 'தெய்வ மகளே' என்ற பாடலுக்காக முதலில் படக்குழுவினர் நஞ்சம்மாவை அணுகினர். அப்போது அவர், தான் ஆடு மேய்க்கும்போது பாடும் 'களக்காத்த சந்தனம்' பாடலை படக்குழுவிற்கு பாடிக் காட்டியுள்ளார்.

அப்பாடலை கேட்ட இயக்குனர் சச்சிதானந்தன், நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்டோருக்கு பிடித்ததை அடுத்து படத்தில் சேர்க்கப்பட்டது. அதே படத்தின் தீம் மியூசிக் ஆன 'அஜகஜக்கா' என்ற பாடலையும் பின்னர் அவரே பாடினார்.

'களக்காத்த சந்தனம்' பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வென்ற அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments