இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

0 3119
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த பார்வதிநாதன், தனது சொந்த ஊரான காரைக்குடியில் நடக்கும் கோயில் திருவிழாவுக்காக குடும்பத்தினருடன் காரில் சென்றார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில் பார்வதிநாதன் அவரது மனைவி மற்றும்இருசக்கர வாகனத்தில் சென்றவரும் இறந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments