ஊழல்களின் சாதனைகளை முறியடித்து விட்டார் மம்தா பானர்ஜி - அனுராக் தாக்கூர்
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஊழலின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஊழலின் சிகரமாக திகழ்வதாக தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் அரசிலும், கட்சியிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறிய அவர், மம்தாவின் அமைச்சர்கள் சுதந்திரமாக ஊழல்களை புரிவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
Comments