மகள்களை கடன் சுமையாக பார்க்கக் கூடாது - உச்சநீதிமன்றம் கருத்து
மகள்களை கடன் சுமையாக பார்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகளின் பராமரிப்பு செலவுக்கு தந்தை அளிக்க வேண்டிய தொகை குறித்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் என்றாலே கடன் சுமை தான் என தந்தை தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், மகள்கள் என்றாலே கடன் சுமைகள் அல்ல என்றும் அரசியல் அமைப்பு சட்டம் 14வது பிரிவின்படி அனைவரும் சமம் என்றும் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக பேசிக் கொள்ளாத மகளும், தந்தையும் பேசுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் மகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தந்தைக்கு உத்தரவிட்டனர்.
Comments