பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டிற்கு ரூ.10,000 அபராதம்..!
விதிகளை மீறி குப்பை கொட்டியதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகரில் உள்ள அவரது வீட்டின் பின்புறம் அனுமதியின்றி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதாக நகராட்சி ஊழியர்களிடம் உள்ளூர் பாஜக கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு செய்த நகராட்சி ஊழியர்கள், பகவந்த் மான் வீட்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்
Comments