உரிமையாளர் பாடுவதற்கு ஏற்ப குரைத்து சங்கீதத்திற்கு ஒலி எழுப்பும் நாய்.. வீடியோ இணையத்தில் வைரல்..!
கேராளாவில், உரிமையாளர் பாடுவதற்கு ஏற்ப நாய் ஒன்று குரைத்து ஒலி எழுப்பும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வர்க்கலா பகுதியைச் சேர்ந்த சங்கீத் ஜெயன் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் சங்கீத் ஜெயனுடன் மேஜையில் அமர்ந்து கொண்டு, அவர் பாடும் சங்கீதத்திற்கு ஏற்ப அதுவும் குரைத்து ஒலி எழுப்புகிறது. இதனை சங்கீத் ஜெயன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
Comments