எந்த வழக்கிற்கு முன்னுரிமை அளிப்பது என்பதே தற்போதைய சவால் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
எந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து தீர்ப்பளிப்பது என்பதுதான் நீதித்துறையில் தற்போது நிலவும் மிகப்பெரிய சவால் என்று, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் குறித்து தாம் பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவித்தார்.
நீதிபதிகள் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த உடலளவிலும், மனதளவிலும் அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீதிபதிகள் குறித்து கூறப்படும் கட்டுக்கதைகளை ஜீரணிப்பது கடினம் என்றும், தேவையற்ற மோதல்கள் மற்றும் அழுத்தத்திலிருந்து சட்டத்தை பாதுகாப்பதற்கே நீதிபதிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தினார்.
Comments