தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் திட்டமிட்டதைவிட மெதுவாக நடைபெற்று வருகிறது - அமைச்சர் நிதின் கட்கரி!
தமிழ்நாட்டில் 40க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை பணிகள் திட்டமிட்டதைவிட மெதுவாக நடைபெற்று வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட 114 பணிகளை, 43 ஆயிரத்து 935 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திமுக மக்களவை எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்விக்கு பதில் அளித்துள்ள நிதின்கட்கரி, 40க்கும் அதிகமான பணிகள் திட்டமிட்டதைவிட மெதுவாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
மணல் அள்ள அனுமதி இல்லாமை, கொரோனா பொதுமுடக்கம், நிலம் கையகப்படுத்துவதில் அரசின் தாமதம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம், குடிநீர் குழாய் உள்ளிட்ட மாற்றுவதில் தாமதம், மெதுவாக பணியாற்றும் ஒப்பந்தகாரர்கள் போன்ற காரணங்கள் பணிகள் தாமதமாகியுள்ளதா நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
Comments