மாணவி ஸ்ரீமதி உடல் அஞ்சலிக்குப் பின் நல்லடக்கம்

0 4896

கணியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உறவினர்கள், ஊர்மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஊர்மக்கள் ஏராளமானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்துக்குப் பின் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த  மாணவி ஸ்ரீமதி ஜூலை 13ஆம் நாள் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் பெற்றோர், உறவினர், ஊர்மக்கள் கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பான வழக்கில் மறுகூறாய்வுக்குப் பின் உடலைப் பெற்றுக்கொள்ளும்படி பெற்றோருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலைப் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். மகளின் உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments