டெல்லிப் போக்குவரத்துக்கு 1500 மின்சாரப் பேருந்துகள் வழங்கும் டெண்டரை பெற்றுள்ள டாட்டா மோட்டார்ஸ்!

0 2190

டெல்லிப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1500 மின்சாரப் பேருந்துகளை வழங்கும் டெண்டர் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதுடன், 12 ஆண்டுகளுக்கு இயக்கிப் பராமரிக்கவும் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. ஏற்கெனவே பல நகரங்களுக்கு 650க்கு மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை டாட்டா மோட்டார்ஸ் வழங்கியுள்ளது.

மின்சாரப் பேருந்துகளைப் பயன்படுத்துவது டெல்லியில் காற்று மாசுபாட்டைப் பெரிதும் குறைக்க உதவும் எனப் போக்குவரத்துக் கழக அதிகாரி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments