"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ரஷ்யாவுக்கான சரக்கு ரயில் போக்குவரத்து தடையை நீக்கியது லித்துவேனியா.!
ரஷ்யாவுக்கான சரக்கு ரயில் போக்குவரத்து தடையை லித்துவேனியா நீக்கியுள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடான லித்துவேனியா வழியே ரஷ்ய பொருட்கள் ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், சாலை வழியான போக்குவரத்துக்கு மட்டுமே தடை என்றும் ரயில் போக்குவரத்துக்கு தடை இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் கூறியது.
மேலும், ரஷ்யாவிலிருந்து மரக்கட்டைகள், மதுபானங்கள், காங்கீரிட்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு லித்துவேனியா அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தது. இதையடுத்து ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதிக்கு சரக்கு போக்குவரத்து விரைவில் தொடங்கும் என லித்துவேனியா ரயில்வே நிறுவனம் தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Comments