மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி இறந்த 10 நாட்களுக்குப் பின் சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு வருகை தந்து படிவத்தில் கையெழுத்து போட்டு உடலைப் பெற்றுக் கொண்டனர்.
மருத்துவமனைக்கு வந்த மாணவியின் உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுதார். மாணவியின் உடலுக்கு அமைச்சர் பெ.கணேசன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வழிஎங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் இறுதி சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெளியாட்கள் அந்த கிராமத்தில்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments