பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 7 மணிநேரம் பெய்த கனமழை..!
பாகிஸ்தானின் 2வது பெரிய நகரமான லாகூரில் 7 மணிநேரம் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த மழையால் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
Comments