தமிழ் பாட்டிம்மாவுக்கு தேடிவந்த தேசியவிருது..! தெம்மாங்கு என்றும் தேன்பாகு
கேரளாவின் அட்டப்பாடியில் வசிக்கும் தமிழ்ப்பாட்டி ஒருவர், அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டிலும் மேட்டிலும் களைப்புத்தீர பாடிய நாட்டுப்புற தெம்மாங்கு திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்ததால் தேடி வந்த தேசிய விருது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அதிகாலை 4 மணிக்கு சோறு சமைத்து வைத்து விட்டு சினிமாகொட்டகையில் எம்.ஜி.ஆர் படம் பார்ப்பதற்க்காக தவம் கிடந்த தமிழகத்தை சேர்ந்த நஞ்சம்மாள் , மணம் முடித்தது கேரளாவின் அட்டப்பாடியில் குடியேறிய பின்னர் அந்த நாளிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சினிமா கூட பார்க்காதவர்..!
ஆனால் அவர் அய்யப்பனும் கோஷியும் படத்திற்காக மலையாள சினிமாவில் பாடிய முதல் பாடலே அவருக்கு தேசிய விருதை பெற்று தந்திருக்கிறது. தனக்கு அந்தப்படத்தில் நடித்த பிரிதிவிராஜையும், பிஜுமேனனையும் தெரியாது என்று தயக்கமே இல்லாமல் பிரிதிவிராஜிடமே வெள்ளந்தியாக தெரிவித்தவர் நஞ்சம்மா..!
அந்த படத்தில் அவர் இரு பாடல்களை பாடி இருந்தார், விருது பெற்றிருக்கும் இந்த பாடல் காட்டில் உள்ள சந்தன மரங்கள் பூத்திருப்பதை காடுகளையும் காண்பித்து குழந்தைகளை சாப்பிட வைக்கும் பாடல் என்று கூறுகின்றார் நஞ்சம்மா
மற்றொன்று குழந்தைகளை தாலாட்டும் தெய்வமகளே பாடல்... இரண்டும் ஹிட் அடித்தாலும், படத்தில் டைட்டில் பாடலாக இருளர் மொழியில் ஒலித்த சந்தன மர பாடலுக்காக தான் அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு இந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது
Comments