பள்ளி மாணவி இறுதிச்சடங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

0 2831

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் இன்று நடைபெற உள்ள நிலையில், உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடலைப் பெற்றோர் வாங்க மறுப்பதாகக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில், இன்று மாலைக்குள் மாணவியின் இறுதிச் சடங்கை முடிக்க பெற்றோருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து, கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் மாணவியின் இறுதி சடங்கில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை கூறாய்வு செய்த அறிக்கையை ஆராய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments