பொன் மாணிக்கவேல் மீது புகார் -சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷா, காவல்துறை முன்னாள் ஐ.ஜி, பொன் மாணிக்கவேல் மீது கூறியுள்ள புகார் குறித்து சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டுசேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே காதர்பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ள வழக்கில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து பொன் மாணிக்கவேல் அதிகார ரீதியில் தம்மை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென அவர் கோரிக்கை வைத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொன் மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Comments