உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை - அமைச்சர் கிரண்ரிஜிஜூ தகவல்

0 1775

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், கடந்த 2010ம் ஆண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்கான 114-வது அரசியல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்றார்.

ஆனால் அந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறிய அவர், அந்த மக்களவை கலைக்கப்பட்டவுடன் அது காலாவதி ஆகிவிட்டது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments