உலகின் 14 சிகரங்களையும் 2-வது முறையாக ஏறி நேபாள வீரர் சாதனை..!

0 1741

நேபாளத்தைச் சேர்ந்த 47 வயதான சானு ஷெர்பா என்பவர் எவரெஸ்ட் உள்ளிட்ட உலகின் 14 உயரமான சிகரங்களில் மீது இரண்டாவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

கிழக்கு நேபாளத்தில் உள்ள சங்குவாசாபா (Sankhuwasabha) மாவட்டத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரரான ஷெர்பா, பாகிஸ்தானில் 8,035 மீட்டர் உயரத்தில் உலகின் 13-ஆவது உயரமான சிகரம் காஷர்ப்ரம் II-ன் உச்சியை அடைந்தார்.

எவரெஸ்ட் சிகரம் உட்பட 14 உயரமான சிகரங்களில் 8 நேபாளத்திலும், 6 சிகரங்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் திபெத் பகுதியிலும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments