வாக்கிங் சென்ற பயில்வானுக்கு ஷாக்கிங் அடிக்கப் பாய்ந்த நடிகை..! பப்ளிக்கில் பம்மிய பயில்வான்

0 8912

யூடியூப்பில் விமர்சித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த நடிகை ரேகாநாயர்,  நடைப்பயிற்சி சென்ற பயில்வன் ரங்கநாதனை மறித்து அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவேசமான நடிகையிடம் பயில்வான் அடங்கிப்போன பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழ் சினிமா நடிகைகளின் அந்தரங்க விவகாரங்களை யூடியூப் சேனல்களில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், இரவின் நிழல் படத்தில் ஆடை இன்றி நடித்த நடிகை ரேகா நாயர் என்பவர் குறித்து வழக்கம் போல தனது பாணியில் விமர்சித்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரேகா நாயர், யூடியூப் சேனல் ஒன்றின் ஏற்பாட்டின் பேரில் பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் திருவான்மியூர் பீச்சுக்கு சென்று அவரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை எப்படி அந்த மாதிரி பெண் என எப்படி விமர்சிக்கலாம் என்று கேட்க, ஆடையில்லாமல் நடிப்பது சரியா என்று பதிலுக்கு பயில்வான் பஞ்ச்சடிக்க, நான் என்ன உங்க பொண்டாட்டியா இல்ல பொண்ணா எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று ரேகா நாயர் எகிற பயில்வான் பம்மினார். அத்தோடில்லாமல் அவரை அடிப்பது போல நடிகை ஆவேசமாக கைவீச பயில்வான் தடுத்ததால் அறைவிழுவதில் இருந்து தப்பினார்.

பயில்வான் உடன் வந்த ரிட்டயர்டு அதிகாரிகள் சிலர் சமரசம் செய்ய முயன்றும் கேட்காமல் அந்த நடிகை அக்கினிப் பிழம்பாய் பொங்க, போலீஸ் ஸ்டேசனுக்கு வா என்று பயில்வான் அழைக்க, அந்த நடிகையோ என் இஷ்டம் எங்க வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று தனது டி சர்ட்டை கழற்ற முயன்றதால் மிரண்டு போன பயில்வான், தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து நடையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், இரவின் நிழல் படத்திற்கான புரமோசன் யுக்திக்காக பார்த்திபன் அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார். சினிமாவில் இப்படி ஆபாசமாக நடிப்பது ஏன் ? என்று கேட்டதற்கு அந்த நடிகை தன்னை மறித்து மோசமாக வாக்குவாதம் செய்ததாகவும், தன்னை அவர் தாக்கி இருந்தால் அவர் மீது விழுந்து கடித்து இருப்பேன் என்றும் கூறினார்.

இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் , இரவின் நிழல் தயாரிப்பாளர் பார்த்திபனிடம் புகார் தெரிவிக்க, அவரோ தனக்கு என்னவென்று தெரியாது எனவும் நடிகை அப்படி நடத்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments