அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு-எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

0 1230

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால மனு குறித்து கட்சி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments