நாட்டின் 15 வது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, 15வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. செல்லுபடியான 4701 வாக்குகளில் 2,824 வாக்குகள் பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் திரவு முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி உள்ளார். திரவுபதி முர்முவின் வெற்றிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, திரௌபதியின் இல்லம் சென்று நேரில் வாழ்த்தினார். இந்தியா புதிய வரலாற்றை எழுதி இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்ளிட்டோரும் திரௌபதியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, 15வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. செல்லுபடியான 4701 வாக்குகளில் 2,824 வாக்குகள் பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் திரவு முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி உள்ளார். திரவுபதி முர்முவின் வெற்றிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி,திரௌபதியின் இல்லம் சென்று நேரில் வாழ்த்தினார். இந்தியா புதிய வரலாற்றை எழுதி இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

Comments