செவித்திறன் குறைபாடுள்ள மாணவனை வேறு பள்ளிக்கு செல்லுமாறு நிர்பந்தம்-நடுநிலைப்பள்ளியில் விசாரணை
திருவாரூர் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவனை வேறு பள்ளியில் சேருமாறு நிர்பந்தித்த, அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
திருவாரூர் வடக்கு வீதியை சேர்ந்த செவித்திறன் குறைபாடுள்ள 10 வயது மாணவன் பவினை சக மாணவர்களுடன் அமர வைக்காமல், வேறு பள்ளியில் சேருமாறு ஆசிரியர்கள் நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்த சாரதி, சம்பந்தப்பட்ட எஸ்.எஸ் நடுநிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
Comments