செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இலவச பேருந்துகள் இயக்கம்

0 3495

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவசமாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

போட்டி நடைபெறும் நாட்களில், மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து புறப்படும் பேருந்து, செல்லும் வழியில் சுற்றுலா பயணிகள் பார்க்க வாய்ப்புள்ள 19 இடங்களில் நின்று மாமல்லபுரம் சென்றடையும் என அறிவிக்கப்படுள்ளது.

இதற்காக 5 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, ஒலிம்பியாட் தொடரை பார்க்க வரும் வெளிநாட்டவர்கள் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க ஆட்டோக்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments