பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் உடல்நலம் பாதிப்பு.. மாசடைந்த ஆற்றின் நீரை பருகியதால் வயிற்றில் பிரச்சனையா?

0 1341

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் வயிறு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அவர் மாசடைந்த ஆற்று நீரை குடித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த தூய்மைப் பணி நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பகவந்த்மான், குருநானக்கின் பாதம் பட்ட இடத்தில் ஓடும் காளிபீன் என்ற மாசடைந்த சிற்றாறில் இருந்து ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்து புனித நீராக கருதி குடித்தார்.

இதனால் தான் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்று கேள்வி எழுந்த நிலையில், அதனை ஆம்ஆத்மி கட்சியினர் மறுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments