நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக அவர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு, சென்னை உள்பட நாட்டின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் போராட்டம் நடத்திய மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
Comments