தலைஞாயிறு பேரூராட்சியில் 4,096 சதுர அடியில் பிரமாண்டமான செஸ்போர்டு வரைந்து விழிப்புணர்வு!
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் 4 ஆயிரத்து 96 சதுர அடி பரப்பில் வரையப்பட்டிருந்த செஸ் போர்டை ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
முன்னதாக பேரூராட்சி அலுவலக முகப்பு பகுதி செஸ் போர்டு போன்று மாற்றப்பட்டிருப்பதை பார்வையிட்ட ஆட்சியருக்கு, செயல் அலுவலர் குகன் செஸ் போர்டை பரிசளித்தார். பின்னர் இருவரும் சிறிது நேரம் அதில் செஸ் விளையாடினர்.
இந்நிலையில், கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு செஸ் போட்டியினை ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
Comments