ஏர் இந்தியா பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்... இதுவரை 4500 பேர் விருப்ப ஓய்வைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்!
ஏர் இந்தியா நிறுவனப் பணியாளர்கள் 4500 பேர் விருப்ப ஓய்வைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 20 ஆண்டு பணியாற்றுவோரும், நாற்பது வயதுக்கு மேற்பட்டோரும் விருப்ப ஓய்வு பெறலாம் என ஜூனில் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.
நாலாயிரத்துக்கு மேற்பட்டோர் அடுத்த இரண்டாண்டுகளில் ஓய்வுபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திறமையானோரைப் பணியமர்த்துவதற்கான ஆள்சேர்ப்பு இயக்கத்தையும் டாட்டா குழுமம் தொடங்கியுள்ளது.
Comments