இயந்திர கோளாறால் அதிவேக படகு தீப்பிடித்து விபத்து - 20 பேர் காயம்
தென் தாய்லாந்தில் அதிவேக படகு தீப்பிடித்து வெடித்து சிதறிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
சும்போன் மாகாணத்திலிருந்து கோ தாவோ தீவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments