திரௌபதி முர்முவின் வெற்றியை பிரமாண்டமாக கொண்டாட முடிவு.. சொந்த கிராமத்தில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திரௌபதி முர்முவின் வெற்றியை கொண்டாட அவரது சொந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் இனிப்புகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 20ஆயிரம் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஓடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் திரௌபதி முர்மு பிறந்தார்.
தங்கள் மண்ணில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வாக இருப்பதால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
திரௌபதி முர்மு வெற்றி பெற்ற செய்தி அறிவித்தவுடன் இனிப்பு வழங்கி, வெற்றி ஊர்வலம்,வாணவேடிக்கை, பழங்குடியினர் நடனம் என கொண்டாடத் தீர்மானித்துள்ளனர்.
Comments