சொல்லிக் கொடுக்காமல் படி படின்னு அடிச்சா.. புள்ளைங்க எப்படி படிக்கும்..? அரசு பள்ளியில் ஆவேசமான தாய்.!

0 23113

செஞ்சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சரியாக தேர்வு எழுதாத 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 72 பேரை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு எதிராக பள்ளிவளாகத்துக்குள் புகுந்த பெற்றோர் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு ஆசிரியர் நந்தகோபால் என்பவர் 72 மாணவர்களை பிரம்பால் தாக்கியதால் பல மாணவர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்

இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதற்றம் உருவானது

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் முறையாக பாரம் நடத்தாமல் தங்கள் பில்ளைகளை படி படி என்றால் எப்படி படிக்கும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பினர்

பதற்றம் ஏற்படாமல் இருக்க பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு செஞ்சி வட்டாட்சியர் நெஹரனிசா விசாரணை மேற்கொண்டு , சம்மப்ந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதனை தொடர்ந்து மாணவர்களை அடித்த புகாருக்குள்ளான ஆசிரியர் நந்தகோபால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

படிக்காத மாணவர்களை கண்டிக்கலாம், அதற்காக உடலில் காயம் ஏற்படும் அளவுக்கு தண்டிக்ககூடாது என்பது பெற்றோர்களின் ஆதங்கமாக உள்ளது. அதே நேரத்தில் 8, 9 , 10 ஆகிய வகுப்புகளில் பொது தேர்வை கொரோனா புண்ணியத்தில் எளிதாக கடந்து 11 ஆம் வகுப்புக்கு வந்திருக்கும் அரசு பள்ளி மாணவர்களில் சிலர் பாடங்களை சிரமத்துடன் புரிந்து கொள்ளும் நிலையில் காணப்படுகின்றனர் என்பதே கசப்பாண உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments