ஏப்ரல் முதல் இலவச அரிசியைத் தெலங்கானா அரசு மக்களுக்கு வழங்கவில்லை - பியூஷ் கோயல்

0 1213

ஏழைகளுக்காக மத்திய அரசால் கூடுதலாக வழங்கப்படும் அரிசியைத் தெலங்கானா அரசு ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்களுக்கு வழங்காமல் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழலுக்குப் பின் மத்திய அரசு திட்டத்தின்படி ஏழைக்குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் மாதத்துக்கு ஐந்துக் கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

பொதுவழங்கல் முறையில் மாநில அரசுகள் இதைப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலையில் பல முறை அறிவுறுத்தியும் தெலங்கானா அரசு ஏப்ரல் முதல் வழங்காமல் உள்ளதாகப் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments