"இந்தியா முழுவதும் பலரை மிரட்டி பணம் பறிப்பு".. சீன கடன் செயலிகளை நடத்திய 4 பேர் கைது..!

0 1563

பல கோடி ரூபாய்க்கு சீன கடன் செயலிகளை நடத்திய 4 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும் அவர்கள் சீன கடன் செயலி நிறுவனங்கள் மூலம் இந்தியா முழுவதும் பலரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்ததாக காவல்துறை கூறியுள்ளது. அவர்களிடமிருந்து 141 சாதாரண போன்கள், 10 ஆன்ட்ராய்ட் போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் 153 ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே பலரை மிரட்டி பணம் பறிக்கும் வகையில் ஆபாச மற்றும் மார்பிங் செய்யப்பட்ட படங்களை அனுப்பியதாக 149 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments