புடினை சந்திக்க 50 வினாடிகள் தாமதமாக வந்த எர்டோகன்... தன்னை காக்க வைத்ததற்கு பழிவாங்கினாரா எர்டோகன் ?
2 ஆண்டுகளுக்கு முன், தன்னை 2 நிமிடங்களுக்கு காக்க வைத்த ரஷ்ய அதிபர் புடினை பதிலுக்கு காக்க வைத்து துருக்கி அதிபர் எர்டோகன் பாடம் புகட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில், துருக்கி அதிபர் எர்டோகன் உடனான சந்திப்பின் போது, புடின் சுமார் 50 வினாடிகளுக்கு நின்றபடியே காத்துகொண்டிருந்தார்.
புடின் தன்னை சந்திக்க வரும் உலக நாட்டு தலைவர்களை மணி கணக்கில் காக்க வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், உக்ரைன் போருக்கு பின்னால் புடின் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Comments