உக்ரைன் போருக்குப் பின் முதன் முறையாக ஈரான் சென்றுள்ள ரஷ்ய அதிபர்; ஈரான் - ரஷ்யா இடையே 4,000 கோடி டாலர் மதிப்பில் ஒப்பந்தம்!
உக்ரைன் போருக்குப் பின் முதன் முறையாக முந்தைய சோவியத் ஒன்றித்தின் எல்லையை தாண்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் சென்றுள்ளார்.
தலைநகர் டெக்ரானில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி, அந்நாட்டின் தலைவர் அயதுல்லா காமேனி மற்றும் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், ஆகியோரை புதின் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் மற்றும் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனம் இடையே 4 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments