கழிவுநீர் கலந்துவிடப்படுவதால் நுரை பொங்க செல்லும் ஆற்று நீர்.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பாலாற்று மழை வெள்ள நீருடன் கழிவு நீர் கலந்துவிடப்படுவதால் நுரை பொங்க நீர் சென்ற நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது.
மழை வெள்ளத்தை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவு நீரை பாலாற்றில் கலந்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதில்லை என தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments