கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியின் மீட்புப்பணி ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் நியமனம்!

0 3773

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியின் மீட்புப் பணி ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் ராஜூ செயல்படுவார் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் அதே பள்ளியில் படிக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதல்கட்டமாக 10, 11, 12 ஆம் வகுப்புகளை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக வருவாய்த்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் ராஜு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments