தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

0 1977

மதுரை, தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுமானத் தொழில் நிறுவனங்களிலும், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

மதுரையில் 4 கட்டுமான நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரில் ஆர்ஆர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் வடபட்டினத்தில் ஆர்ஆர் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் முருகப் பெருமாளின் சொகுசு பங்களாவில், நடத்திய சோதனையில் ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், அங்கிருந்த காவலாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் சேடப்பட்டியில் சரவணபெருமாள், ராமு ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments