திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் விசாரணை..!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலிருந்து வந்த NIA எஸ்.பி தர்மராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு, காலை 6 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் அருகே ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் பிடிபட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 11 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் என மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Comments