அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

0 2526

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 11 ஆம் தேதி இருதரப்பினர் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பி.எஸ்., மற்றும் ஈ.பி.எஸ். சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கட்சி அலுவலக பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக இன்று பிற்பகலில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments