இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு - மாலையில் முடிவு தெரியும்

0 1498

பொதுமக்களின் கோபாவேசத்தில் சிக்கிய கோத்தபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 3 பேர் களத்தில் உள்ளனர்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே கட்சியில் இருந்த டலஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுன (Janatha Vimukthi Peramuna) கட்சியின் அனுர குமார திசநாயக்க உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

எதிர்க்கட்சியான பொது ஜன பெரமுன கட்சித் தலைவர் சஜித் பிரமேதசா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அழகபெருமாவை ஆதரிப்பதாகவும், அவர் வெற்றிபெற கடுமையாக உழைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் டலஸ் அழகபெருமா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சஜித் பிரமேதசாவுக்கு பிரதமர் பதவி வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி, இடைக்கால அதிபர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அண்மையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சகாரா கரியவம்சம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சி உறுப்பினர்கள், டலஸ் அழகபெருமாவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு நடைபெற்று மாலைக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments