"சில்லரையாக விற்கபடும் அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி இல்லை" - நிர்மலா சீதாராமன்
சில்லரையாக விற்கபடும் அரிசி, கோதுமை, பருப்பு, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், லேபிள் ஒட்டபட்டு, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments