பேங்க் ஆப் பரோடா வங்கியில், ரூ.3.28 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாயம் - சிபிஐ அதிகாரிகள் விசாரணை

0 1377
பேங்க் ஆப் பரோடா வங்கியில், ரூ.3.28 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாயம் - சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயம்புத்தூர் நஞ்சப்பா சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில், 3 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், அந்த வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 70 கோடியே 40 லட்ச ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளில் 2 கோடியே 83 லட்ச ரூபாய் குறைவாக இருந்துள்ளது. ஆர்.பி.ஐ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கியில் அதற்கு பின்னர் சேகரிக்கப்பட்டிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மண்டல அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது மேலும் 45 லட்ச ரூபாய் குறைவாக இருந்துள்ளது.

மொத்தம் 3 கோடியே 28 லட்ச ரூபாய் மாயமானது தொடர்பாக வங்கி ஊழியர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments