மனைவி என்று நினைத்து மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபர்..!

0 2288

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடிபோதையில் மனைவி என்று நினைத்து 14 வயது மகன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அங்குள்ள அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்த முருகன் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு அவர் தனது மனைவி சுமதியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த முருகன், வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த  மகன் அர்ஜுன் தலை மீது அம்மிக்குழவி கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அர்ஜுன் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments