கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையில் அடித்து நொறுக்கப்பட்ட நகை கடை..

0 1700
புதுச்சேரியில், பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனை தொடர்பாக நகை கடையை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்ற கும்பலை, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில், பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனை தொடர்பாக நகை கடையை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்ற கும்பலை, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 

கொசக்கடை வீதியில் செயல்பட்டு வந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தி, கற்களை கொண்டு கடையினுள் தாக்குதல் நடத்தியதோடு, கடை உரிமையாளர் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

விசாரணையில், முருகனுக்கும், கடலூரில் உள்ள அவரது உறவினர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்ததாகவும், அதனால் ஆட்களை ஏவி நகைக்கடையை தாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments