ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அறுபது லட்சம் ரூபாயை ஆட்டைய போட்ட நபர் கைது!
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி சிவகங்கையில் 90 க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறி 90க்கும் மேற்பட்டோரிடம் தலா 50 ரூபாய் பணமும், பாஸ்போர்ட்டையும் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் மோசடி கும்பலை செர்ந்த திருப்பாசேத்தியை சேர்ந்த காளீஸ்வரனை சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்த போலீசார் அவரிடமிருந்த பாஸ்போர்டுகளை கைப்பற்றி, அவரது கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments