அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

0 2504

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ( சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல், குமரிக் கடல், கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments