கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வுக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்

0 12338

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

மாணவியின் உடலை சென்னை உயர் நீதிமன்றம் மறுகூறாய்வு செய்வதற்கு உத்தரவிட்ட நிலையில், தங்கள் தரப்பு மருத்துவரையும் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இன்று மறு உடற்கூறாய்வு செய்வதற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, நாளை விசாரிப்பதாக தெரிவித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments