பருத்தி மூட்டைகளை விற்பனை செய்வதற்காக சுமார் 2 கி.மீ தூரத்திற்கு சாலையில் காத்திருக்கும் விவசாயிகள்.!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், பருத்தி மூட்டைகளை ஒழுங்குமுறை கூடம் மூலம் விற்பனை செய்வதற்காக, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் வாகனத்தில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு புதன்கிழமையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் மறைமுக ஏலம் விடப்பட்டு பருத்தி விற்பனை செய்யப்படுகிறது.
Comments