திருமண கோஷ்டி சென்ற படகு நதியில் கவிழ்ந்து கோர விபத்து... 20 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் 100 பேர் அடங்கிய திருமண கோஷ்டி சென்ற படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
சாதிக்பாத் மாவட்டத்தில் சிந்து நதியில் படகு சென்ற போது அதிக பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. 20 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 30 பேருக்கும் மேற்பட்டவர்களை தேடி வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 35 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments