கூகுள் நிறுவனத்திற்கு ரூ.2,900 கோடி அபராதம் விதிப்பு
உக்ரைனில் போர் நடவடிக்கை குறித்த வதந்திகளை நீக்கத் தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் 2ஆயிரத்து 900 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
யூடியூப் தளத்தில் ஒளிபரப்பான உக்ரைன் போர் குறித்த செய்திகள், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையிலும், இளைஞர்களை நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டும் வகையிலும் இருந்ததாகவும், அதை நீக்கக் கோரி பலமுறை எச்சரிக்கை விடுத்தும், நீக்கத் தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்ய தொலைத் தொடர்புத்துறை கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது
Comments